உடனடி மணி ஆர்டர் சேவை – Instant Money Order at Post office (IMO)
Your close relative or friend goes out of town. Does not know anyone there closely. Accidentally loses the wallet including ATM card.
Imagine such a scenario🤔😩
How can you help them from here itself?
Very easy. Go to the nearest big Post Office, tell them you want to send IMO (Instant Money Order) Fill the form giving details such as Payee, Remitter and the amount to be sent and pay the amount. You will be given a Sealed Cover.
Open the cover and you can see a 16 digit number. SMS the number to the person at the other end who can approach the big Post Office there, fill one application along with the 16 digit number and receive the amount!
You can send Rs.1,000 to 50,000.
You may think this is just like Western Union Money Transfer but the vast network of Post Offices can serve you anywhere; even in places where there is no Western Union.
For your information; this service is available at around 40,000 places all over India.
https://www.indiapost.gov.in/Financial/Pages/Content/IMO.aspx
நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்
இது வேடிக்கையான ஒரு சொல்லாடலாக மாறிவிட்ட இன்றைய சூழலில், இது ஒரு உண்மையான நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் செய்தி.
இப்படி ஒரு சூழலை நினைத்துப் பாருங்கள், உங்கள் கணவரோ மனைவியோ வெளியூர் சென்றுள்ளார், அங்கே வேறு யாரும் அதிகம் பழக்கமில்லை, அங்கு திடீரென ஏடிஎம் கார்டு உட்பட பணப்பையை தவறவிட்டுவிடுகிறார், நீங்கள் அவருக்கு எப்படி இங்கிருந்தே உதவுவது.
மிகச்சுலபம், அருகில் உள்ள ஏதாவது ஒரு பெரிய தபால் நிலையம் செல்லுங்கள், அங்கே IMO (Instant Money Order) அனுபவேண்டும் என்று சொல்லுங்கள்.
விண்ணப்பத்தில், பெறுனர் அனுப்புனர் விபரம் மற்றும் அனுபவிரும்பும் தொகை மூன்றையும் நிரப்பி பணத்தை செலுத்தினால், உங்களுக்கு ஒரு சீல் செய்யப்பட்ட கவர் தரப்படும்.
வெளியே வந்து அந்த கவரை பிரித்தால் உள்ளே ஒரு 16 இலக்க எண் இருக்கும், அந்த நம்பரை உங்கள் கணவர் அல்லது மனைவிக்கு SMS செய்யுங்கள், அந்த எண் என்ன என்று அந்த கவரை உங்களுக்கு கொடுத்த தபால்நிலைய ஊழியருக்கு கூட தெரியாது.
உங்கள் கணவர் அல்லது மனைவி தாங்கள் இருக்கும் ஊரில் உள்ள பெரிய தபால் நிலையத்துக்கு சென்று அங்குள்ள விண்ணப்பத்தில் இந்த 16 இலக்க எண்னை கொடுத்தால் உடனே பணம் கொடுக்கப்படும்.
ரூ.1000 முதல் ரூ.50,000 வரை அனுப்பலாம் Western Union Money Trasfer இது போல தானே உனு நீங்கள் கேட்கலாம், ஆனால் Western Union கிளைகள் இல்லாத இடங்களிலும் அஞ்சல்துறை அலுவலகம் உள்ளது
இந்த சேவை இந்தியா முழுவதும் சுமார் 40,000 இடங்களில் உள்ளது, தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1500 கிளைகளில் இந்த சேவை கிடைக்கும்.

