பில்லி கிரகாமின் வாழ்க்கை
21st பெப்ரவரி 2018 நம்மை விட்டு பிரிந்த Dr. Billy Graham பற்றி சில முக்கிய விபரங்கள் இதோ….
பில்லி கிரஹாம் (பிறப்பு: நவம்பர் 7, 1918)
அமெரிக்காவைச் சேர்ந்த வல்லமையான சுவிசேஷகர்.
தெற்கத்திய Baptist Church ஊழியராக ஆரம்ப காலத்தில் இருந்தவர் இவர்
உலகக் கிறிஸ்தவர்கள் மத்தியில் பிரபலமடைய ஆரம்பித்தது 1949ல் தான்.
இவர் மிகப்பெரிய Open Stages கூட்டங்களை நடத்தி மக்களை ஈர்த்தார்.
இவரது வானொலி மற்றும் தொலைக்காட்சி பிரசங்கங்கள் இன்றும் பல நாடுகளில் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.
இவர் அமெரிக்காவின் பல அதிபர்களுக்கு ஆன்மீக ஆலோசகராக இருந்துள்ளார்.
அவர்களில் டுவைட் டி ஐசன்கோவர், லின்டன் ஜான்சன் மற்றும் ரிச்சர்டு நிக்சன் போன்றோர் இவருக்கு மிகவும் நெருக்கமானவர்களாக அறியப்பட்டனர்.
குடிசார் உரிமைகள் இயக்கம் அமெரிக்காவில் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில்
இவர் தனது எழுப்புதல் கூட்டங்களுக்கு வரும் இருவினத்தவருக்கும் ஒரே மாதிரியான நாற்காலிகள் வழங்கப்பட வேண்டும் என கோரினார்.
இதன் தொடர்ச்சியாக 1957ம் ஆண்டு நியூயார்க் நகரத்தில் நடந்த கூட்டத்தில் அவ்வியக்கத்தின் தலைவரான மார்ட்டின் லூதர் கிங்கை தன்னுடன் சேர்ந்து போதிக்க அழைத்தார்.
மேலும் 1960ம் ஆண்டு திரு கிங் அவர்கள் கைது செய்யப்பட்டபோது இவர்தான் அவரை பிணையில் எடுத்து சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்தார்.
பிற ஊழியர் யாராவது பிரசங்கிக்கும் போது அதை தாழ்மையோடு கேட்டு ரசிப்பார்
பிரங்க குறிப்பையும் எழுதி எடுப்பார்.
இவரை பற்றிய சில விசேஷங்கள்:-
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
1) இவருக்கு முன்னும் இவருக்கு பின்னும் இவரின் ஊழியத்தில் கூடியது போல்
வேறு எவருக்கும் ஜனக்கூட்டம் கூடியது இல்லை.
2) சபைகளுக்குள்ளேயே சுற்றிக்கொண்டிராமல் Open Stages களில் புது ஆத்துமாக்களுக்கே
சுவிசேஷம் அறிவித்தார்.
3) அற்புதங்கள், தீர்க்கதரிசனங்கள், பிசாசு துரத்துதல் போன்றவைகள் இவரின் ஊழியத்தில்
இடம் பெறவேயில்லை ஆனால் ஆத்தும அறுவடையில் இவரின் சாதனையை இது வரை யாரும்
முறியடிக்க முடியவில்லை…
4) “வேதம் சொல்லுகிறது” என்ற வார்த்தையை பிரசங்கத்தில் அடிக்கடி இவர் உபயோகிப்பார்.
(பிசங்கத்தின் முடிவில் பல்லாயிரம் பேர் தங்கள் பாவங்களிலிருந்து கண்ணீரோடு மனந்திரும்புவார்கள்)
5) இவர் மேடையில் நின்று தேவ வார்த்தையை பேசும் போது ஆகாயத்தில் நிற்பது போலவே
உணருவாராம்…
6) வெற்றிகரமான சுவிசேஷகர் ஒரு வேத வல்லுனராகவும் இருப்பது அவசியம் என்பதை
உணர்தியவர் இவர்.
7) வெற்றியின் ரகசியத்தை ஓரே வார்த்தையில் “ஜெபம்” என்று சொல்லி முடித்தவர் இவர்.
8) பாவ மன்னிப்பு / பரலோகம் / நரகம் / நித்தியம் / இயேசுவின் ரத்தம் / இரட்சிப்பு / நியாயத்தீர்ப்பு / பாவம் சிலுவை / தேவ அன்பு போன்ற வார்த்தைகள் இவரின் பிரசங்கத்தில் நிறைந்து காணப்படும்.
9) குடும்ப வாழ்வில் மிகவும் சாட்சியோடு வாழ்பவர்.
10) அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு போதகராக இருந்தும், “சுவிசேஷகர்” என்ற ஸ்தானத்தையே உலகின் மிக உன்னத ஸ்தானமாக கருதினார்
11)1956, 1977 மற்றும் 80களில் என மூன்று முறை இந்தியா வந்துள்ளார். தமிழ்நாட்டில் சென்னை மற்றும் பாளையம்கோட்டையில் பிரசங்கம் செய்தார்.
நம்முடை தேவ ஆவியானவர் அனேக அற்புதங்களை செய்தாலும் “மறு பிறப்பு அடையச்செய்தல்” என்ற
அற்புதத்தையே பிரதானமாக செய்கிறார் என்பதற்கு Dr. Billy Graham யின் வாழ்க்கை சரித்திரம்
ஓர் பிரதான எடுத்துக்காட்டாகும்..!!

