தமிழ் பைபிள் - சில கடின சொற்களும் விளக்கமும்
தமிழ் பைபிளில் உள்ள சில கடின சொற்களுக்கான விளக்கம்.
(-இது ஒரு நண்பர் எனக்கு அனுப்பியது. அனேகரின் உபயோகத்துக்காகப் பதிகிறேன்.)
. அகத்தியம் (எஸ் 4:8) – கட்டாயம், அவசியம்
. அகரதமான (ஏசா 14:15) – ஆழமான
. அசங்கியம் (எஸ்றா 9:11) – அருவருப்பு, தூய்மையின்மை
. அசம்பி (1 சாமு 21:5) – பயணிகள் தோட்பை (அகராதி குறிப்பு)
. அஸ்திராயுதம் (எரே 50:25,51:20) – அதிகபட்ச கோபத்தில் பிரயோகிக்கும் ஒரு கொடுமையான ஆயுதம்.
. அஞ்சிக்கை (ஓசி 3:5) – அச்சம், பயம்
. அசூசம் (புலம்பல்) – தீட்டு
. அசுப்பு (யோபு 9:23, எரோ 4:20) – சடுதியாக, திடீரென வருதல்
. அபரஞ்சி பூஷணம் (நீதி 25:12) – புடமிடப்பட்ட பொன்
. அழுங்கு (லேவி 11:30) – எறும்பு தின்னும் ஒருவித விலங்கு
. அழிம்பு (எரே 6:7) – கொள்ளையும், சூறையாடுதலும்
. ஆரோகணம் (சங் 120-134) – இசையில் மேலேறும் ஓர் சுருதி
. இதமியம் (நியா 18:20) – மகிழ்ச்சியோடு உடன்படுதல்
. ஈசல் போடுதல் – விசிலடித்தல் (விசிலடித்து நையாண்டி செய்தல்)
. இளக்கரிப்பு (ஏசா 42:4) – சோர்ந்து போதல்
. உக்கல் (ஆப 3:16) – உறுத்துப் போதல்
. உசாவு துணை (யோபு 26:3) – உற்ற துணைவன்
. உம்பிளிக்கை (எஸ்றா 9:12) – மானியமாக கொடுக்கப்பட்ட பொருள். ஆனால் இவ்விடத்தின அர்த்தம் (நித்திய சுதந்திரம்)
. உறுமால் (அப் 19:12) – கைக்குட்டை துணி
. ஒற்தலாம் (மத் 23:23,லூக் 11:42) – ஒரு தானிய வகை. (புதினா)
. கடாட்சம் (உன் 8:10) – அருட்பார்வை, கருணை பெறுதல்
. ஏகோபித்து (நியா 20:1) – ஒருமித்து
. கட்டியக்காரன் (தானி 3:4) – அரசு கட்டளையை ஊரில் பறைசாட்டுவோன்
. கலாதி (எஸ்றா 4:15) – கலகம், சண்டை, புரட்சி
. கலிக்கம் (வெளி 3:18) – கண்ணிலிடும் மருந்து
. கிரியிருப்பவர்கள் (2 இராஜா 14:14) – பிணைக் கைதிகள்
. கறளை (எரே 48:6) – பிரயோஜனமில்லாத
. காங்கை (ஏசா 25:5) – வெப்பம்
. காய்மகாரம் (1சாமு 18:9) – பொறாமை
. கிரியாப்பிரமாணம் (ரோம 3:27) – செயல்களில் முக்தியடைய முயற்சித்தல்.
. கிரித்தியங்கள் (நியா 2:19) – தீய பழக்கங்கள், காலங்காலமாக விடாமல் வைத்திருக்கும் தீய கிரியைகள்
. குருக்கு (ஆதி 3:18) – நெருங்சில் செடி (அதிக முட்களை கொண்ட ஓர் தாவரம்)
. குங்கிலியம் (யாத் 30:34) – ஒருவகை நறுமணப் பொருள். (வெள்ளை குங்கிலியம், கருங்குங்கிலியம் என இரண்டு வகை இருப்பதாக தெரிகிறது)
. குலாரி வண்டில் (ஏசா 66:20) – மிருகங்கள் இழுத்துச்செல்லும் வண்டி. பல்லாக்கு
. கொறுக்கை (ஏசா 19:6) – கோரைப்புல் / நாணல்
. கொடி மாசி (யோபு 38:37) – நிலையற்று அலையும் மேகங்கள்
. கும்பு (எசே 7:14) – ஜனக்கூட்டம்
. கொம்மை (நெகே 3:1,11) – இவ்வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு. இவ்விடத்தில் பெரிய மதில்களின் மேல் ஏற்படுத்தப்படும் காவல் மாடங்கள் என பொருள்படும்.
. கோரி (யோபு 21:32) – கல்லறை, சமாதி
. சாமாசி பண்ணும் தூதன் (யோபு 33:23) – மத்தியஸ்தர், சமரசம் செய்பவர்
. சம்பாரம் (எசே 24:10) – உணவில் சேர்க்கப்படும் நறுமணப் பொருள்.
. சலக்கரணை (2 இராஜா 4:13) – கரிசணையோடு
. சளுக்கு (எரே 5:28) – நயமாக பேசுதல்
. சன்னது (எஸ்றா 7:11) – ஆவணம், கடிதம், அரசாணை
. சர்ப்பனை (அப் 25:3) – வஞ்சனை, பதுங்கி இருந்து தாக்குவதற்கு சூழ்ச்சி
. சன்னதக்காரன் (உபா 18:11) – பில்லி சூனிய, ஏவல் வேலை செய்கிறவன்
. சுயம்பாகி (ஆதி 40:1) – சமையற்காரன்
. சீதளம் (ஆதி 8:22) – பல அர்த்தங்கள்உண்டு. குளிர்ச்சி என்ற அர்த்தம்
. சிரேஷ்டம் (நாகூம் 3:8) – தலை சிறந்தது.
. சொகுசா (எசே 1:4,8:2) – துத்தநாகமும், செம்பும் கலந்த ஓர் உலோகம்.
. சுணை (எரே 51:27) – கூர்மையான முட்கள் போன்ற கொடுக்கு.
. தகசுத்தோல் (யாத் 25:5,26:14) – கடற்பசுவின் தோல், (நீர் நாய், நீர் பசு)
. தஸ்திர அறை (எஸ் 6:1) – பத்திரங்கள், அரசு ஆவணங்கள் வைக்கும் அறை
. தர்ப்பணம் (யாத் 38:8) – கண்ணாடி (வெண்கல கண்ணாடி)
. தாக்கீது (தானி 6:7,8,12) – ஆணை.

