ஏமி கார்மிக்கேல்
ஏமி கார்மிக்கேல் நினைவு நாள்

1912 ஆம் ஆண்டு. ஓர் மாலை நேரம். சூரியன் தன் கண்களை மூடிக்கொண்டிருந்தது. ஏமி கார்மிக்கேலின் கண்கள் தெளிவாக திறந்து இருந்தன. காதுகள் அந்தச் சத்தத்தை கூர்மையாக கேட்டுக்கொண்டிருந்தன.
“ஊழியத்துக்கு புறப்பட்டு போ” இதுவே அந்த சத்தம். உடனே இறைவன் பாதம் தன்னை ஒப்புக்கொடுத்தார். ஜப்பான் நாட்டை நோக்கி தன் பயணத்தைத் தொடர்ந்தார். 15 மாத ஊழியத்தை முடித்துக் கொண்டு இலங்கை சென்று பணியாற்றினார்.
அக்காலத்தில் இந்தியாவில் தேவதாசி முறை பின்பற்றப்பட்டு சமுதாயம் சீரழிந்துக் கொண்டிருந்தது. இம் மக்களை மீட்கவோ, ஆதரவு கொடுக்கவோ யாரும் முன் வராத வேளை. ஏமி கார்மிக்கேல் 1895 ஆம் ஆண்டு இந்தியா நோக்கிப் புறப்பட்டார்.
சிறுமியர் மற்றும் பெண்கள்ப் போன்று சிறுவர்களும் கோவில்களுக்கு படைக்கப்பட்டு நாடகக் கம்பனிகளுக்கு விலைக்கு விக்கப்பட்டனர். இத்தகைய ஒழுக்கமற்ற வாழ்வைத் தடுக்க 1926ல் “டோனாவூர் ஐக்கியத்தை” உருவாக்கினார். ஏமி கார்மிக்கேல் திக்கற்றவர்கள், விதவைகள், துன்பப்படுவோர், விதவைகள், ஒழுக்கங்கெட்டவர்கள், ஆதரவற்றோன் போன்றோருக்கு புகலிடம் தந்து அவர்களுக்கு கிறிஸ்துவின் அன்பைச் செயல் வடிவில் காட்டினார். இந்த அமைப்பே ” நட்சத்திர கூட்டம்” என்று அழைத்தார். இன்றும் டோனாவூர் ஐக்கியம் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்டோருக்கு வாழ்வளித்து வருகிறது. செம்புலிங்கம் என்ற மாபெரும் கொள்ளையனும் இவரால் மனம் திரும்பினான் என்பது குறிப்பிடத்தக்கது.
56 ஆண்டுகள் இந்தியாவில் நசுக்கப்பட்டவர்களுக்காகவே சேவை செய்த இவர் 38 நூல்களை எழுதினார். அவைகளில் பல நூல்கள் தம் வாழ்நாளில் எலும்பு முறிவினால் 20 ஆண்டுகள் தாம் படுத்த படுக்கையில் இருந்தப்போது எழுதியவையே “ஏழைகள் என்னுடையவர்கள்” என்ற வாக்கின்படி வாழ்ந்த இவ்வம்மையார் 1951ஆம் வருடம் இநாளில் விண்ணகம் சென்றார்.
மண்ணில்:16-12-1867
விண்ணில்:18-01-1951
ஊர் :கவுன்டி டவுன்
நாடு : அயர்லாந்து
தரிசன பூமி:இந்தியா
👉அன்புக்கூராமல் கொடுக்க முடியும் – ஆனால்
கொடுக்காமல் அன்புகூர முடியாது👈
ஏமி கார்மிக்கேல்
